சென்னை மெட்ரோ மற்றும் எம்.ஆர்.டி.எஸ் (MRTS) ரயில் சேவைகளை ஒன்றிணைப்பதற்கான இறுதி ஒப்புதலை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கான முன்மொழிவு முதன்முதலில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஒப்புதலின் மூலம் எம்.ஆர்.டி.எஸ் ரயில் சேவையின் சொத்துக்கள், அதன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

