தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் இணைந்ததில் தங்களுக்கு லாப நோக்கம் ஏதுமில்லை என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களுக்குத் திரும்ப வழங்கும் நோக்கிலேயே இத்திட்டத்தில் தாங்கள் பங்கேற்றுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பளித்த முதலமைச்சர் விஜய்க்கு அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரமும் தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் சிறந்த கைவினைத்திறனுடன் இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


