உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மாநாட்டின் போது சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு கூட்டத்தை தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் பலரை மேடைக்கு வரவழைத்து செயற்கையான நெரிசலை ஏற்படுத்தியதாக அக்கட்சியினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த நெரிசலைப் பயன்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தாக்க முயற்சி நடந்ததாகவும், இதற்கான காணொளி ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.


