நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் காணாமல் போனது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசரத் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


