நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்; இதில் இந்தியாவில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற 133 பேரும் அடங்குவர். காணாமல் போனவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாள மலைப்பகுதியில் பதிவான 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் சரிந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சேறும் சகதியுமாக ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் புதைந்துள்ளன. மேலும், சாலைகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரிடரால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பத்துக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த விடுதிகள் உள்ளிட்ட தங்குமிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதமடைந்துள்ளன.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F27%2Fnepalflashflood-2026-08-27-08-28-03.jpg&w=3840&q=75)

