நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்தியா கூடுதல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. இதற்காக இரண்டாவது விமானம் இன்று நேபாளத்திற்குப் புறப்படுகிறது.
முன்னதாக, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முதல் விமானம் நேற்று நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது கூடுதல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.



