இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில், முன்னாள் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது.
பிசிசிஐ ஆடவர் தேர்வுக் குழு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு பல நாள் போட்டிகளுக்கான அணிகளை அறிவித்துள்ளது. ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனிடையே, கடந்த உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்ட கோவாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சிகுருபதி வெங்கடாவும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நான்கு முக்கிய தொடர்களில் விளையாடி 49 விக்கெட்டுகளையும் 380 ரன்களையும் அவர் குவித்தது குறிப்பிடத்தக்கது.



