டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் கோவை கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்றுள்ளது.
முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் இந்த அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



