நிதி நெருக்கடி காரணமாக காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தேவையற்ற பெரிய கட்டுமானத் திட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 18 கிராமங்களை உள்ளடக்கி இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 3,500 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் சிக்கியுள்ள CMDA-வின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இதற்காக 2023-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை அரசு தற்போது ரத்து செய்துள்ளது.



