நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்த சிசிடிவி காட்சிகளில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள், தாங்கள் அழைத்துச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் குழுவினர் தான் என சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் சிலர் மலை மீது ஏறி தப்பியிருக்கலாம் என்றும், மற்றவர்கள் சீன எல்லைப் பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சீன எல்லைப் பகுதி முழுவதும் ஆறு அடி உயரத்திற்கு சேறு சூழ்ந்துள்ளதால், அங்கு சிக்கியுள்ள தங்கள் குழுவின் மூன்று பிரிவினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. நேபாள அரசு தரப்பிலிருந்து மட்டுமே வெள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் கிடைப்பதாகவும், சீன அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.

