2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் தமிழக வெற்றிக்கழகம் உடன்படவில்லை என்றால், அக்கட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வோம் என அறிவித்துள்ளார்.
