சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்குப் பிறகு, ஒரு சிலிண்டர் 2,916 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சிலிண்டர் தொடர்ந்து 957 ரூபாய் 50 காசுகள் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

