தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 395 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவற்றில் ஏப்ரல் மாதமே கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஆண்டு கட்டண திருத்தம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
