திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் 52 முக்கிய கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பிரத்யேகப் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

