தமிழகத்தில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று முதல் ரேசன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படுகிறது.
தற்போது வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


