கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செல்போன் வைப்பதற்கான டோக்கன் பெறுவதற்காகவே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் செய்யும் தவறுகளுக்காக லட்சக்கணக்கான பக்தர்களைப் பாதிக்கும் வகையில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது தேவையற்றது. மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்ற செயலாகவே இந்தத் தடையை பார்க்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.


