தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு நடிகர் அஜித் குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வாசகத்தை மேற்கோள் காட்டிய அஜித், "தமிழக அரசின் இந்தச் சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

