சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு ஆற்றிய உரைக்கு, தவெக எம்.எல்.ஏ.க்கள் மேசையைத் தட்டித் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தற்போதைய ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் திமுக ஆட்சியை விமர்சிப்பதைத் தவிர்த்து, தற்போதைய ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று எ.வ.வேலு கேட்டுக்கொண்டார். தாங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளால்தான் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

