ஈரான் போர் சூழல் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கேலன் டீசலின் விலை தற்போது 5.85 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 552 ரூபாய்க்கு சமமாகும்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் ஒரு கேலன் டீசல் 3.71 டாலராக இருந்த நிலையில், தற்போது அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அமெரிக்க சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


