ஈரோட்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை உதயநிதி ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது காவி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளதா என அவர் விமர்சித்துள்ளார். பெரியார் மற்றும் அண்ணாவைப் புறக்கணிக்கும் முதலமைச்சர், உடனடியாக இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
