மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். இந்த விழாவிற்காக சுமார் 6,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
