பொது வழியில் மக்களுடன் இணைந்து செல்வது அவமரியாதையான செயலாகுமா என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் கோயில் தரிசனம் தொடர்பாக இந்த வினாவை முன்வைத்தார்.
அதிகாரிகள் மக்கள் பணி செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தான் பல கோயில்களுக்குச் செல்லும்போதும் விஐபி வரிசையைப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களுடன் மக்களாகச் சென்று தரிசனம் செய்வதை அவமரியாதையாகக் கருதுகிறாரா என்று முன்னாள் அமைச்சரை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்.
