தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் மற்றும் திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் நவம்பர் 7-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். அதேபோல், நவம்பர் 9-ம் தேதி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.





