லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வாட்ஸ்அப் எண் மூலம் மக்களை ஏமாற்ற வேண்டாம் என லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. ராஜா ராம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
வாட்ஸ்அப் மூலம் வரும் புகார்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட வேண்டாம் என எச்சரித்தார். நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலையைச் செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



