தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோயில்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் வீடியோ எடுப்பது மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவை அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு வசதிகளை அடுத்த 20 நாட்களுக்குள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயில் கருவறைகள் மற்றும் தெய்வச் சிலைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின்படி, கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
மேலும், கோயில்களுக்கு வருகை தரும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விவரங்களை ஒரு நாளுக்கு முன்பாகவே ஆணையருக்குத் தெரிவிக்க வேண்டும் என கோயில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பிரமுகர்கள் வருகையின் போது கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




