நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓராண்டில் ஊக்கத்தொகை ரூ.156-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய கணிசமான உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என அரசு குறிப்பிட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வருமானம் கிடைக்கும். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், விவசாயிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
