அரசு வேளாண் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உழவர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகளை மேற்கொள்ள ஆகஸ்ட் 25, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாள எண் பெற்றவர்கள், விடுபட்ட நிலப் புல எண்களையும் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்வதற்கு ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மற்றும் நில உரிமை ஆவணங்கள் தேவைப்படும். கட்டணமில்லாமல் பதிவு செய்ய, அந்தந்தப் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகலாம். அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் விவசாயிகள் இப்பதிவை மேற்கொள்ளலாம்.
