கிருஷ்ணகிரி அருகே மல்லிகைப்பூக்கள் மூட்டை மூட்டையாக ஆற்றில் கொட்டப்பட்டுள்ளன. விளைச்சல் அதிகரிப்பு மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் உழைப்பிற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்ய முடியாமல் ஆற்றில் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
