ஊரகப் பகுதிகளில் உள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தக் கடனுதவி 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். இதில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
